வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ராமகிருஷ்ணன் என்ற முதியவரிடம் இருந்து கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 10 பவுன் தங்க நகை மற்றும் காரை வழிப்பறி செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை காவல் துறையினர் சிவகங்கை பகுதியில் தலைமறைவாக இருந்த கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ராகப்பன் […]
