விவசாயியே உருட்டு கட்டையால் தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபுலியூர் கிராமத்தில் கஜேந்திரன் என்ற விவசாயி வசித்துவருகிறார். இவருக்கு நள்ளிரவில் தனது வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்டு எழுந்த கஜேந்திரனை மர்மநபர்கள் உருட்டுக்கட்டையால் தலையில் பலமாக தாக்கினர். அதன்பின்னர் அவரது மனைவி லட்சுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை […]
