Categories
தேசிய செய்திகள்

வாக்குகளைக் கவர பட்ஜெட்டை கருவியாகப் பயன்படுத்துவது சரியா? – சிவசேனா..!!!

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை கவரும் வகையில் மத்திய பட்ஜெட் கருவியாக பயன்படுத்த பட்டுள்ளதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்  2021- 2022ஆண்டிற்கு  நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிவசேனா விமர்சித்துள்ளது. பட்ஜெட் குறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வமான […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியைச் சந்திக்காதது ஏன்? – உத்தவ் தாக்கரே பதில்

 மகாராஷ்டிரா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இதுவரை உத்தவ் தாக்கரே டெல்லி சென்று பிற கட்சித் தலைவர்களைச் சந்திக்கவில்லை. இதுதொடர்பாக சாம்னா நாளேடுக்கு அவர் பதிலளித்தார். சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், முதலமைச்சரான நிலையில் இதுவரை டெல்லி செல்லாதது ஏன் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அதில் உத்தவ் தாக்கரே, “நான் நிச்சயம் டெல்லி செல்வேன். இதில் எந்த பிரச்னையும் இல்லை. இதுவரை டெல்லி செல்வதற்கான எந்த தேவையும் ஏற்படவில்லை என்பதால், […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிக்கிறது – சிவ சேனா குற்றச்சாட்டு

எல்ஐசி, ஐடிபிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சி செய்துவருவதன் மூலம் மத்திய அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பது தெரியவருகிறது என சிவசேனா குற்றஞ்சாட்டியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது எல்ஐசி நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஐடிபிஐயில் மத்திய அரசின் மீதமுள்ள பங்குகளும் விற்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். இது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

Categories
தேசிய செய்திகள்

அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்… எந்த மாற்றுக் கருத்துமில்லை- சிவசேனா!

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு அகற்ற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை என  சிவசேனா கூறியுள்ளது.  குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை NPR பதிவேடு ஆகிய மூன்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக குறிப்பாக மத அடிப்படையில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

அதிரடியில் இறங்க இருக்கும் மகாராஷ்டிரா?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப் ஆகிய சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜூ வாக்மேர் கூறுகையில், “எங்கள் கட்சியின் மூத்தத் தலைவர் பாலாசாகேப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எல்லாம் போச்சு…. மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் ….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்துவந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜக தலைவராக ஹெச். ராஜா நியமிக்கப்பட வேண்டும்”…. சிவசேனா தலைவர் ராதாகிருஷ்ணன்.!!

பாஜகவின் தமிழக தலைவராக ஹெச். ராஜா நியமிக்கப்பட வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், “உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கின்றோம். 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை நாங்கள்தான் செய்தோம் என கூறும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராகுலின் பேச்சு, ஆளுமை வாக்காளர்களை கவரவில்லை” சிவசேனா விமர்சனம்…!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை  வாக்காளர்களை கவரவில்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  மோசமான படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கடந்த   2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியை விட மிக மோசமான தோல்வியை இம்முறை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு காரணம், ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஆளுமை வாக்காளர்களைக் கவரவில்லை என்பதே ஆகும் என […]

Categories

Tech |