‘நான் பால் தாக்கரேவின் மகன், பாஜகவின் சவாலை ஏற்கிறேன்’ என்று கூறிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ‘முடிந்தால் சிவசேனா ஆட்சியை கவிழ்த்து பாருங்கள்’ என மத்திய அரசுக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார். மகாராஷ்டிராவின் வடக்கு எல்லை மாவட்டமான ஜல்கான், முக்தாய் நகரில் நடந்த விவசாயிகள் பேரணியில் மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். இந்தப் பேரணியில் மூத்த தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவாரும் கலந்துகொண்டார். விவசாயிகள் பேரணி பேரணியில் பேசிய உத்தவ் […]
