வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் தனிப்பட்ட முறையில் தானும் பாதிக்கப்பட்டதாக வங்கதேச பிரதமர் சேக் அசீனா தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் சேக் அசீனா முதல் நாளான நேற்று டெல்லியில் நடைபெற்ற தொழில்துறை கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் தானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக பகிர்ந்து கொண்டார். மேலும் வெங்காய ஏற்றுமதியை திடீரென இந்தியா எதற்காக நிறுத்தியது என எனக்கு தெரியவில்லை […]
