விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ’96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் 2020 காதலர் தினத்தில் வெளியாகிறது. விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ’96’.முழு நீளக் காதலை ஓவியமாகத் தீட்டியது போன்று காதல் காவியமாக அமைந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. ’96’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கிலும் இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த் மற்றும் த்ரிஷா கதாபத்திரத்தில் சமந்தாவும் நடிக்கின்றனர். […]
