தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 622 புள்ளிகள் உயர்ந்து 30,819 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் உயர்ந்து 9,076 புள்ளிகளில் முடிந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் குறியீடு 217.69 புள்ளிகள் உயர்ந்து 30,524.53 ஆக அதிகரித்திருந்தது. இது 0.72 விழுக்காடு உயர்வாகும். தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரையில், நிஃப்டி […]
