சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அடுத்த நாளே ஷாஹீன் பாக்கில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா சூளுரைத்துள்ளார். டெல்லியில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பாஜகவை ஆதரித்து டெல்லி விகாஸ்பூரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “ஷாஹீன் பாக் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்களது சகோதரிகளையும், மகள்களையும் பாலியல் […]
