பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் பெண்களை ஆபாசமாக கொடுமை படுத்தும் வீடியோவை வெளியிட்டனர்.இது சமூக வலைதளத்தில் வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். […]
