வீட்டிற்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள அடையாறு பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பட்டதாரி பெண் தனியாக வசித்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி அந்தப் பெண் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஒரு வாலிபர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப்பெண் வீட்டிற்குள் நுழைந்த உடன் வாலிபர் அத்துமீறி உள்ளே சென்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனையடுத்து வாயில் துணியை வைத்து, கைகளை […]
