காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் சகோதரிக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா வீதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ரூபன். பட்டதாரியான இவர் வீடு கட்டி விற்கும் வேலை செய்துவருகிறார். இவரும் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரூபனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அந்தப் பெண் ரூபனிடமிருந்து விலகி, காதலிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரூபன், இருவரும் […]
