15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் விமல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
