வடிகால் வசதி செய்து தர வேண்டி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கழுமங்கலம் ஊராட்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கழுமங்கலத்தில் உள்ள வடக்கு மற்றும் மேற்கு தெருவில் சரியான வடிகால் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்கி சாலையும் சேதமடைந்துள்ளது. மேலும் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் போது சாலையில் நடப்பவர்கள் மீது கழிவுநீர் தெரிக்கிறது. மேலும் இந்த கழிவு நீரினால் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. […]
