அமெரிக்காவில் மிகவும் இளம்வயதில் மேயரான சார்லி என்ற குழந்தைக்கு மக்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகணத்தில் உள்ள வைட்ஹால் பகுதியின் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வர்களுக்கு நிதி திரட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மேயர் பதவி ஏலம் விடப்படுவது வழக்கம். அந்தவகையில், கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் மிகவும் கவுரமான மேயர் பதிவியை சார்லி என்ற ஏழு மாத குழந்தை அதிக விலைக்கு ஏலம் எடுத்து வெற்றிபெற்றது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வைட்ஹால் பகுதியில் மேயர் […]
