ரேஷன் கடையில் சர்வர் பிரச்சினையால் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ரேஷன் கடைகளில் 14 வகையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதார் கார்டு விவரங்கள், விரல் ரேகை மூலம் விற்பனை இயந்திரங்கள் பதிவேற்றம் செய்து பொருட்கள் வழங்கும் போது இயந்திரம் பழுதால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க முடியாமல் சிக்கல் ஏற்படுகிறது. இது பற்றி ரேஷன் ஊழியர்கள் வட்டார மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் […]
