மனைவி மற்றும் மகள் வீட்டில் இல்லாத சமயத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மடத்துகுப்பம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் தெருவில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வனிதா, பச்சையம்மாள் என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்து துரைராஜ் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். […]
