இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 25 கிரிகோரியன் ஆண்டு : 268_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 269_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 97 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 275 – உரோமில் பேரரசர் அவுரேலியன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டசீட்டசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 762 – அப்பாசியக் கலீபகத்திற்கு எதிராக அலீதுகள் கிளர்ச்சியில் இறங்கினர். 1237 – இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் தமது பொது எல்லைகளை வரையறுக்கும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. 1396 – உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார். 1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா […]
