இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 21 கிரிகோரியன் ஆண்டு : 264_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 265_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 101 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 455 – பேரரசர் அவிட்டசு தனது இராணுவத்துடன் உரோம் சென்றடைந்து தனது ஆளுமையை உறுதிப்படுத்தினார். 1170 – டப்லின் இராச்சியம் நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது. 1776 – நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது. 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. 1843 – ஜான் வில்சப் மகெல்லன் நீரிணையை சிலி அரசுக்காக உரிமை கோரினார். 1860 – இரண்டாம் அபினிப் போர்: […]
