இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 18 கிரிகோரியன் ஆண்டு : 261_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 262_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 104 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 96 – உரோமைப் பேரரசர் தொமீசியன் கொல்லப்பட்டதை அடுத்து நேர்வா பேரரசராக முடிசூடினார். 1066 – நோர்வே மன்னர் எரால்சு ஆர்திராதா இங்கிலாந்து மீதான முற்றுகையை ஆரம்பித்தார். 1180 – பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார். 1679 – மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் இருந்து நியூ ஆம்ப்சயர் தனியாகப் பிரிக்கப்பட்டது. 1739 – பெல்கிரேட் நகரம் உதுமானியப் பேரரசிடம் கையளிக்கப்பட்டது. 1759 – ஏழாண்டுப் போர்: கியூபெக் நகரை பிரித்தானியா பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது. 1810 – சிலியில் முதலாவது அரசு அமைக்கப்பட்டது. 1812 – மாஸ்கோவில் பரவிய தீ […]
