இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 15 கிரிகோரியன் ஆண்டு : 258_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 259_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 107 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 668 – கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்சுடன்சு இத்தாலியில் அவரது குளியலறியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். 994 – பாத்திம கலீபகம் பைசாந்தியப் பேரரசுக்கு எதிரான முக்கிய வெற்றியைப் பெற்றது. 1556 – முன்னாள் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு எசுப்பானியா திரும்பினார். 1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: நியூயார்க் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரித்தானியப் படைகள் கிப்சு குடாவில் தரையிறங்கின. 1794 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஆர்தர் வெலசுலி (பின்னாளில் வெலிங்டன் […]
