இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 14 கிரிகோரியன் ஆண்டு : 257_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 258_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 108 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 81 – டைட்டசு இறந்ததை அடுத்து அவரது சகோதரன் தொமீசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார். 629 – பேரரசர் எராக்கிளியசு பாரசீகப் பேரரசை வென்ற பின்னர் கான்ஸ்டண்டினோபிலை அடைந்தார். 786 – அல்-காதி இறந்ததை அடுத்து அவரது சகோதரர் அருண் அல்-ரசீது அப்பாசியக் கலீபாவாக நியமிக்கப்பட்டார். 1752 – கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும். […]
