இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 12 கிரிகோரியன் ஆண்டு : 255_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 256_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 110 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 490 – மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது. 1185 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் அந்திரோனிக்கசு கான்ஸ்டண்டினோபிலில் படுகொலை செய்யப்பட்டார். 1609 – என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார். 1634 – மால்ட்டாவில் வல்லெட்டா நகரில் வெடிமருந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் […]
