விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருதாச்சலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என வக்கீல்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஒருவரை ஒருவர் கைகளை கோர்த்தபடி நீண்ட வரிசையில் நின்று கொண்டு மைக்கல் அம்பேத்கர் தலைமையில் பட்டி முருகன், பூமாலை குமாரசாமி, சிவாஜி, புஷ்ப […]
