இந்தியாவில் விவாதிக்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் உள்ள நிலையில் இ-சிகரெட் தடைச் சட்டம் குறித்து விவாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர், “இ-சிகிரெட் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் 1.02 விழுக்காடு மக்கள் மட்டுமே, இந்த விவாதத்திற்கு என்ன அவசரம். தேசிய அளவில் பல பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவம், அனைவருக்கும் சமமான அதிகாரம் அளித்தல் போன்ற பிரச்சினைகள் உள்ளன. இதற்கு தரவேண்டிய முக்கியத்துவத்தை விட […]
