ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த சுமார் 250 பயங்கரவாதிகள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே முகாமிட்டு உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான உறவை குறைத்துக் கொண்டது.மேலும் சீனாவின் உதவியுடன் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. ஆனால் பெரும்பாலான நாடுகள் காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்து விட்டனர். […]
