மத்திய அரசின் உத்தரவின் படி செஞ்சிக் கோட்டையின் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. எனவே மத்திய அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நினைவுச் சின்னங்களை மே மாதம் 15ஆம் தேதி வரை மூட அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் செஞ்சி கோட்டையில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. […]
