தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் அரிசியையும், கடத்த பயன்படுத்திய லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்துவதாக வந்த தகவலின்படி அதனை தடுக்கும் பொருட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாவட்ட வழங்கல் அதிகாரி சுவராஜ் தலைமையில், துணை தாசில்தார் அருள்லிங்கம், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், வருவாய் துறை பறக்கும்படை தனி தாசில்தார் பாபு ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழு ரோந்து […]
