சீர்காழி பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய கொடியம்பாளையம் கடற்கரை தீவை சுற்றுலாத் தலமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். நாகை மாவட்டம் பிச்சாவரம் அருகே தீவு போன்று காட்சியளிக்கும் கொடியம்பாளையம் கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று சட்ட பேரவை கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில் சீர்காழி தொகுதி MLA கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொடியம்பாளையம் கடற்கரை தீவானது, […]
