தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்த பெட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி பகுதிக்கு அருகே சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சுங்கசாவடிக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர்கள் இணைந்து சுங்கச்சாவடி அருகே உள்ள கடையில் சோதனை செய்துள்ளனர். […]
