குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்க கமலுக்கு திமுக நேரில் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மசோதாவுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், […]
