ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி தொடர் ரத்து செய்யப்பட்டதால் இன்று சொந்த நாட்டிற்கு திரும்புகிறது. தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தது. இரு அணிகளும் இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் மோத இருந்த முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து மார்ச் 15 ஆம் தேதி லக்னோவிலும், 18 ஆம் தேதி கொல்கத்தாவிலும் கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி நடைபெறுவதாக இருந்தது. […]
