பேராசிரியையின் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்களிங்கபுரம் உச்சி சாமி கோவில் தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அவரின் தாயார் வீட்டிற்கு தூங்குவதற்காக சென்றதால், ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். […]
