பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க மறுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலின் நிலை மிக மோசமாக மாறிவிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க மறுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயரும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் கடலில் இருக்கக்கூடிய கனிமவளங்களான பவளப்பாறை உள்ளிட்டவை அழியும் ஆபத்து இருப்பதாகவும், கடலில் இருக்கக்கூடிய அரிய உயிரினங்கள், மீன்கள் என அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
