ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கனூர் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக பொன்மணி என்பவருடன் ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரீபுரத்தானில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது ஸ்கூட்டரின் பின்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் சாலையோரமாக ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பின்பகுதியை திறந்து பார்க்க முயற்சி செய்துள்ளார். […]
