பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரன் என்ற 17 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசங்கரன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு சென்று கதவை அடைத்து கொண்டார். அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் […]
