பரிட்சையில் பிட் அடித்ததற்காக ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் கணேசன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் விஜய்பிரகாஷ் அதே பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 1௦ ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வில் விஜய்பிரகாஷ் பிட் அடித்ததற்காக ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். […]
