லாரி சக்கரத்தில் சிக்கி தலைமையாசிரியர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவெண்ணெய்நல்லூரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசங்கர் தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர் பிடாகம் குச்சிபாளையம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி இவரின் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல […]
