காணாமல் போன 14 வயது மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொங்கரப்பட்டு கிராமத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய 9-ஆம் வகுப்பு படிக்கும் ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து பச்சையப்பன் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 17 வயதுடைய சிறுவன் தனது மகளை கடத்திச் சென்றுள்ளதாக பச்சையப்பன் […]
