அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவின் காரணமாக 1,706 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 2018 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது ஆசிரியர் இல்லாமல் உபரியாக இருந்தக் காலிப்பணியிடங்களை, அரசிற்கு ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டது. அதனடிப்படையில் ஆசிரியர்கள் இல்லாமல் காலியாக உள்ள உபரிப் பணியிடங்களில், வரும் காலத்தில் ஆசிரியர்கள் […]
