11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தண்டவாளத்தில் விழுந்த பந்தை எடுக்க முயற்சிக்கும் போது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் நகரில் ரமேஷ் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் ராகுல் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதனையடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தானது அருகில் […]
