வெள்ளம் புகுந்ததால் வகுப்பறையில் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காய்பேட்டை கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. இந்நிலையில் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இதனால் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் சேதமடைந்ததோடு, அங்கு மண் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 225 […]
