தூத்துக்குடியைச் சேர்ந்த தம்பதியினர் தொலைக்காட்சியில் சுர்ஜித் மீட்பு பணியை பார்த்துக் கொண்டு அலட்சியமாக இருந்ததால் அவர்களது 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன், நிஷா ஆகிய தம்பதிக்கு ரேவதி சஞ்சனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் நேற்றையதினம் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணி குறித்து தொலைக்காட்சியில் கண்ணிமைக்காமல் ஆர்வமாக […]
