கொல்கத்தா நகரில் நடந்த வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் காரணம் என்ற அமித்ஷாவின் குற்றசாட்டுக்கு அக்கட்சி மறுப்பை தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் நேற்று மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா கல்லூரி சாலைக்குள் பேரணியுடன் நுழைந்தபோது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தியதால் கூட்டம் கலைந்து சென்றது. இதையடுத்து அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. இந்த வன்முறை குறித்து […]
