வேலூர் மக்களவை தொகுதியில் உரிய ஆவணமின்றி ரூபாய் 3.57 கோடி கைப்பற்றப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என மும்முனைப் […]
