விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைப்பாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாத்தூர் ,படந்தால், கொல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக வைப்பாறு விளங்குகிறது. இந்நிலையில் வைப்பாற்றில் அதிக அளவிலான கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து சாத்தூரை சேர்ந்த பொதுமக்கள் வைப்பாறு முழுவதையும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து […]
