சுந்தர மகாலிங்க சுவாமியை வழிபட சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி பகுதியில் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை பாதுகாப்பு கேட் முன்பு குவிந்துள்ளனர். இந்த கேட் இன்று அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள் பக்தர்களுடைய உடமைகளை பரிசோதனை செய்த பின்னர் அவர்களை உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுந்தர […]
