சாத்தான்குளம் காவல் சித்ரவதை மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாதென விசிக சார்பில் வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுமென்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 காவல் உதவி ஆய்வாளர், 2 காவல் அதிகாரிகள் உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. […]
