வயலில் பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருணாபுரம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பூங்காவனம் என்பவர் அவரது வயலில் 200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 20 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சாராய ஊறல் மற்றும் எரிசாராயத்தை […]
