அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த லாரியை மறித்து நிறுத்தி அதில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் லாரியில் […]
