சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மதிப்பனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஓடை பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அந்த சமயத்தில் சிலர் பெரிய ஓடையிலிருந்து டிராக்டரில் மணல் அள்ளி கொண்டு வருவதை காவல்துறையினர் கண்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டரை மடக்கி பிடிக்க முயன்றபோது டிரைவர் டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். […]
